செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 26 டிசம்பர் 2017 (12:54 IST)

ஏப்ரலில் ரிலீஸாகிறது ஜி.வி.பிரகாஷின் ‘100% காதல்’

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘100% காதல்’ படம், ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எம்.சந்திரமெளலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் படம் ‘100% காதல்’. தெலுங்கில் வெளியான ‘100% லவ்’ படத்தின் ரீமேக் இது. இந்தப் படத்தில், ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்த ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். நாசர், ஜெயசித்ரா, லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகிபாபு, சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
 
இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷே இசையமைக்கிறார். 90 சதவீத படப்பிடிப்பு லண்டனிலும், 10 சதவீத படப்பிடிப்பு இந்தியாவிலும் நடைபெறுகிறது. இந்தப் படம், ஏப்ரல் மாத கோடை விடுமுறையில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.