1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (12:05 IST)

சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் மீரா மிதுன்! நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரா?

பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகை மீரா மிதுன் நேற்று கேரளாவில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை சென்னைக்கு அழைத்து வரப்போவதாக செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தியின்படி கேரளாவில் கைதான நடிகை மீரா மிதுன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்த விசாரணைக்குப் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த படுவார் என்றும் அதன்பின் நீதிபதியின் உத்தரவை அடுத்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. போலீசாரின் விசாரணையின் போது மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்த பேச்சுக்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்