ஷாப்பிங் மாலில் துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர் – அமெரிக்காவில் பரபரப்பு!

Last Updated: சனி, 21 நவம்பர் 2020 (10:16 IST)

அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணாத்தில் நேற்று மதியம் ஷாப்பிங் மால் ஒன்றில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

விஸ்கான்சின் மால்காணத்தின் புறநகர் பகுதியில் மேஃபேர் மால் உள்ளது.
அங்கு நேற்று மதியம் 2.30 மணிக்கு வந்த மர்மநபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதனால் பதற்றமான மக்கள் சிதறி ஓடினர். இதில் 8 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மநபர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. இதுபற்றி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலவரையற்று அந்த மால் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :