1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 7 ஜனவரி 2022 (10:09 IST)

ஹேப்பி பர்த்டே எஸ். பி. பி. சரண்... !

புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மகனும் திரைப்பட நடிகராகவும் திரைப்பட பின்னணிப் பாடகராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் பிரபலமானவர் எஸ். பி. பி. சரண். இவர் 2007ஆம் ஆண்டு சென்னை 600028 என்ற தமிழ்த் திரைப்படத்தை தயாரித்து வெற்றி கண்டார். 
 
அதன் பிறகு 2008ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் சரோஜாவில் முக்கிய வேடத்தில் நடித்து நடிக்கிறாங்க களமிறங்கினார். இதற்கிடையில் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியிருக்குறார். மேலும், இவர் தயாரித்த தெலுங்கு திரைப்படம் ஆரண்ய காண்டம் 2012 ல் தேசிய விருது வென்றது.
 
இப்படி திரைத்துறையில் பாடகர், நடிகர் , தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட எஸ். பி. பி. சரண் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறை நண்பர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.