1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : திங்கள், 5 பிப்ரவரி 2024 (12:08 IST)

சங்கர் மகாதேவன் இசைக்குழு உருவாக்கிய ஆல்பத்திற்கு கிராமி விருது: குவியும் வாழ்த்துக்கள்..

சங்கர் மகாதேவன் உள்ளிட்ட நான்கு இசை பிரபலங்கள் இணைந்து உருவாக்கிய ஆல்பத்திற்கு  இசைத்துறையின் உயரிய விருதான கிராமி விருது கிடைத்துள்ளது. 
 
இன்று அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட உள்ளது. சர்வதேச அளவில் இசை துறையில் உயரிய விருதான கிராமி விருது சங்கர் மகாதேவன், செல்ல கணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஜாகிர் உசேன் ஆகியோர் அடங்கிய இசை குழு இணைந்து உருவாக்கிய சக்தி ஆல்பத்திற்கு கிடைத்துள்ளது. 
 
மொத்தம் எட்டு பாடல்கள் அடங்கிய இந்த ஆல்பத்திற்கு கிராமிய விருது  கிடைத்துள்ளதை அடுத்து இந்த இசை குழுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.  சிறந்த ஆல்பம் பிரிவில் கிராமி விருது கிடைத்துள்ளதை அடுத்து இசைக்கு குழுவினருக்கு இசைத்துறையை சேர்ந்தவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran