வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 18 டிசம்பர் 2018 (16:53 IST)

விஜய்யுடன் 5வது முறையாக இணையும் பிரபலம்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகவுள்ள 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் ஒவ்வொரு பிரபலமாக இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் கோபி பிரசன்னா என்ற பிரபலம் தற்போது இணைந்துள்ளார். இவர்தான் இந்த படத்தின் போஸ்டர் டிசைனராக பணிபுரியவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்த 'கத்தி', 'தெறி', ''மெர்சல்' மற்றும் 'சர்கார்' ஆகிய நான்கு படங்களுக்கும் போஸ்டர் டிசைன் செய்த இவர் தற்போது ஐந்தாவது முறையாக இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த படத்திலும் இவரிடம் இருந்து அட்டகாசமான போஸ்டர்களை எதிர்பார்க்கலாம்

விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ள இந்த படத்தில் காமெடிக்கு விவேக் மற்றும் யோகிபாபு உள்ளனர். மேலும் இந்த படத்தில் கதிர் மற்றும் மேயாத மான் இந்துஜா இணையவுள்ளனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்