1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2023 (19:26 IST)

உலகம் முழுவதும் ஒரே சண்டை தான்: ‘அறம்’ இயக்குனரின் அடுத்த பட டீசர்..!

நயன்தாரா நடித்த அறம் இயக்குனர் கோபி நயினார் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் கருப்பர் நகரம் என்று நேற்று வெளியான நிலையில் இன்று என்ற படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. 
 
ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த இந்த படத்தில் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக ’உலகம் முழுவதும் ஒரே சண்டை தான் வேளாங்கண்ணி,  100 பேர் பாடுபட்டத ஒருத்தன் திங்கறதா, இல்ல 100 பேர் பாடுபட்டு 100 பேர் பங்கு போட்டுக்கிறதா என்பதுதான்,  உடம்புல ரத்தம் சூடா இருக்கிற வரைக்கும் தான் சண்டை செய்ய முடியும், உன் உடம்பில் ரத்தம் சூடா இருக்கு, நீ தான் செய்யணும்’  என்ற வசனம் டீசரை பார்க்கும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கோபி நயினார் இயக்கத்தில், கேஎஸ் பிரசாத் இசையில், ஏகாம்பரம் ஒளிப்பதிவில் உருவாகிய அந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது  
 
100 பேர் வேலை செய்யும் பலனை ஒரே ஒருவர் அனுபவித்து வருவதை அடுத்து அந்த ஒருவரை எதிர்த்து  நடக்கும் போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்பது டீசரிலிருந்து தெரிய வருகிறது. மொத்தத்தில் அறம் படத்தைப் போலவே இந்த படத்தையும் இயக்குனர் கோபி நயினார் வெற்றி படமாக இயக்கி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva