ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 30 செப்டம்பர் 2021 (18:18 IST)

சசிகுமார், ஜோதிகாவின் ’உடன்பிறப்பே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சசிகுமார், ஜோதிகாவின் ’உடன்பிறப்பே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அக்டோபர் 14-ஆம் தேதி ’அரண்மனை 3’ உள்பட ஒரு சில திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் ஜோதிகா மற்றும் சசிகுமார் நடித்த ’உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படம் அமேசான் ஓடிடியில்  வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் ஒரே நேரத்தில் ஓட்டிய நான்கு படங்கள் ஓடிடிக்காக தயாரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படம் அமேசான் ஓடிடியில்  வெளியானது என்பதும் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ரம்யா பாண்டியன் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ’உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோதிகா மற்றும் சசிகுமார் ஆகிய இருவரும் அக்கா தம்பியாக நடித்திருக்கும் இந்த படத்தை இரா. சரவணன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படமும் வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி கலையரசன் சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்