அடுத்தடுத்து இரண்டு ஹிட்… அதிரடியாக சம்பளத்தை ஏற்றிய மணிகண்டன்!
கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும் குவித்தது. இதையடுத்து அதே தயாரிப்பு நிறுவனத்துக்கு மணிகண்டன் லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்ட போதே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படத்தில் டாக்ஸிக் காதலராக மணிகண்டன் நடித்திருந்தார். தன்னுடைய கேரியர், காதல் வாழ்க்கை தொடர்பான தடுமாற்றங்களில் அவர் எவ்வளவு மோசமானவராக நடந்து கொள்கிறார், அதில் இருந்து எப்படி வெளிவருகிறார் என்பதை சொல்லி இருந்தது லவ்வர் திரைப்படம். இந்த படமும் இளைஞர்களைக் கவர்ந்து வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
இப்படி அடுத்தடுத்த இரண்டு ஹிட்களைக் கொடுத்துள்ள மணிகண்டனை நோக்கி அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளதால் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளாராம். இனிமேல் நடிக்கும் படங்களுக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் என்று தன்னை தேடி வருபவர்களிடம் கூறி வருகிறாராம்.