1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2024 (13:37 IST)

கோட் படம் மங்காத்தாவ விட 100 மடங்கு இருக்கணும்… வெங்கட்பிரபுவை வாழ்த்திய அஜித்!

இந்த ஆண்டில் வெளியாகவுள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக உருவாகி வருகிறது விஜய்யின் GOAT திரைப்படம். இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் சேட்டிலைட் உரிமயை ஜி நிறுவனமும், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் வட இந்திய மொழிகளுக்கான ரிலீஸ் உரிமையை ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இப்போது ஆனந்த விகடன் ஊடகத்துக்கு இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்துள்ள நேர்காணலில் “கோட் படம் தொடங்கும்போது அஜித் சார் என்னிடம் மங்காத்தாவ விட நூறு மடங்கு இருக்கணும் இந்த படம் என வாழ்த்தினார். எப்படிப்பட்ட மனசிருந்தா இந்த வார்த்தை வரும்? அவர் சொன்னதை நிறைவேற்றியுள்ளேன் என நினைக்கிறேன். மக்கள்தான் அதை சொல்லவேண்டும்” எனக் கூறியுள்ளார்.