1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (09:03 IST)

தமிழ்நாட்டின் அனைத்து தியேட்டர்களிலும், அனைத்துத் திரைகளிலும் ‘கோட்’ ரிலீஸ்… விநியோகஸ்தர் போடும் திட்டம்!

இந்த ஆண்டில் வெளியாகவுள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக உருவாகி வருகிறது விஜய்யின் GOAT திரைப்படம். இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் சேட்டிலைட் உரிமயை ஜி நிறுவனமும், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் வட இந்திய மொழிகளுக்கான ரிலீஸ் உரிமையை ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு விநியோக உரிமையை பெற்றுள்ள ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தியேட்டர்களிலும் திரைகளிலும் கோட் ரிலீஸ் அன்று அந்த படம்தான் ஓடவேண்டுமென முடிவெடுத்து, அதற்கேற்ப காய் நகர்த்தி வருகிறார் என சொல்லப்படுகிறது.