ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 3 டிசம்பர் 2018 (19:43 IST)

4 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஜெனிலியா..! சந்தோஷத்தில் துள்ளி குதித்த கணவர் ரித்தேஷ்!

நான்கு வருடங்கள் கழித்து நடிகை ஜெனிலியா தனது கணவருடன் மீண்டும் படத்தில் நடித்துள்ளார். 
சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம் என ஒரு சில படங்களில் நடித்தாலும், ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து சென்றவர் நடிகை ஜெனிலியா. பாய்ஸ் படம் மூலம் அறிமகமான அவர், நடிகர் ரித்தேஷை தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு, இல்லற வாழ்வில் செட்டிலான ஜெனிலியா நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். 
 
ஜெனிலியா ரித்தேஷூடன்  சேர்ந்து  மஸ்தி, துஜே மேரி கசம், தேரே நாள் லவ் ஹோ கயா, லாய் பாரி உள்ளிட்ட வெற்றி படங்களில் இணைந்து நடித்தனர். இருவரும் திருமணம் செய்துகொண்ட பின்னர், அவ்வப்போது தங்களுடைய காதல் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் தற்போது , நடிகர் ரித்தேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் நடிக்கும் மராத்தி படம் மாவுலி பாடல் காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் நடிகை ஜெனிலியா ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ரித்தேஷூடன் ஆடிப்பாடி மகிழ்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகியுள்ளது. 
 
இது தொடர்பாக நடிகர் ரித்தேஷ் தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது , " எனது மனைவி ஜெனிலியாவுடன் நான்கு ஆண்டுகள் கழித்து நடிக்கிறேன். முதல் படத்தில் எப்படி நடித்தாரோ இதிலும் அப்படியே இருக்கிறார். அதே மேஜிக் மீண்டும் நடந்தது", என குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த வீடியோவை சுமார் 16 லட்சம் இதுவரை பார்த்துள்ளனர். வாவ், சூப்பர் என வீடியோ குறித்தும், ரித்தேஷ், ஜெனிலியா ஜோடி குறித்தும் அவர்களது ரசிகர்கள் பாராட்டியும், வாழ்த்து தெரிவித்தும் பதிவு வெளியிட்டு வருகின்றனர்.