செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 12 ஆகஸ்ட் 2020 (18:58 IST)

பைத்தியமா நீ..? இனி இப்படி செய்யாதே - ஜூலியை எச்சரித்த காயத்ரி ரகுராம்!

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி , பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார் . முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது . ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள் . பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பிறகு விளம்பரம் , ரியாலிட்டி ஷோ , பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார் .

அதற்கு ஏற்றார் போல ஜூலியும் இடைவிடாமல் அடுத்தடுத்து கன்டென்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார். தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யாவிட்டாலும் சில சமயம் கடுப்பாகி நெத்தியடி பதில் கொடுத்து கிண்டல் செய்பவர்களின் மூக்கை உடைப்பார்.


அந்தவகையில் அண்மையில் ஜூலி தனது ட்விட்டரில் மெழுகு வர்த்தியை உடலில் ஏற்றி விசித்திரமான போட்டோ ஷூட் நடித்தி விமர்சனத்திற்கு ஆளானார். இந்நிலையில் அது குறித்து நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில்,  " “பைத்தியக்காரத்தனம்...  இனி இப்படி செய்யாதே. நீ எப்படி இருக்கின்றாயோ அதுதான் அழகு ” என்று ஜூலியை கண்டித்து பதிவிட்டுள்ளார். காயத்ரி ரகுராமின் இந்த பதிவு சிறந்த அறிவுரை என்று இணையவாசிகள் கூறி வருகின்றனர்.