1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 16 மே 2024 (16:02 IST)

கௌதம் மேனன் இயக்கத்தில் நயன்தாரா… சூப்பர் ஸ்டாரோடு மீண்டும் கூட்டணி!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் ட்ரண்ட் செட்டிங் படங்களாக அமைந்தன. கடைசியாக அவர் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் சிக்கலில் மாட்டித் தவிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸுக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. அதற்குக் காரணம் அவரின் கடன் தொல்லைகள்தான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் மலையாள சினிமாவில் இயக்குனராகக் கால்பதிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மம்மூட்டி நடிக்கும் ஒரு படத்தை அவர் விரைவில் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. நயன்தாரா மம்மூட்டி கூட்டணி ஏற்கனவே ‘ராப்பக்கல்’,‘புதிய நியமம்’, ‘பாஸ்கர் த ராஸ்கல்’ ஆகிய மூன்று படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.