செவ்வாய், 25 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 மே 2024 (14:12 IST)

’தக்லைஃப்’ படத்தில் சிம்பு நடிக்க கூடாது.. தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த ஐசரி கணேஷ்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ’தக்லைஃப்’ திரைப்படத்தில் சிம்பு நடிப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான நிலையில் இன்று திடீரென தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்,  கமல் - மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்க கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் அவர் தனது தயாரிப்பில் உருவாக இருந்த ’கொரோனா குமார்’ என்ற படத்தில் நடிப்பதாக சிம்பு ஒப்புக்கொண்டிருந்தார் என்றும் ஆனால் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் தன்னுடைய படத்தில் நடித்து முடிக்காமல் அவர் வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ’கொரோனா குமார் படத்தில் நடித்து முடிக்காமல் வேறு படத்தில் நடிக்க கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்தின் ரெட் கார்டு சிம்பு மீது உள்ளது என்றும் அதை மீறி அவர் எப்படி ’தக்லைஃப்’ படத்தில் நடிக்கலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எனவே தனது தயாரிப்பில் உருவாக இருக்கும் ’கொரோனா குமார் படத்தில் நடித்து முடித்துவிட்டு தான் சிம்பு மற்ற படத்தில் நடிக்க வேண்டும் என்றும் ’தக்லைஃப்’ படத்தில் நடிப்பதாக ஒப்பந்தமாகியுள்ள சிம்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran