ஸ்டைலா கெத்தா புகைப்படம் வெளியிட்ட ஸ்ருதிஹாசன்!
நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். தமிழில் இப்போது அவர் கைவசம் ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது. தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து திரைத்துறையில் இயங்கி வரும் சினிமா மன அழுத்தம் மிகுந்த துறை எனக் கூறியுள்ளார்.
அடிக்கடி தன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களோடு அவர் தொடர்பில் உள்ளார். அந்த வகையில் கருப்பு உடையில் அவர் வெளியிட்டுள்ள ஸ்டைலான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.