1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (10:46 IST)

பொங்கலுக்கு எந்த படத்தை ரிலீஸ் செய்வது? குழப்பத்தில் சன் பிக்சர்ஸ்!

சன் பிக்சர்ஸ் நிறுவன இப்போது தமிழின் எல்லா முன்னணி நடிகர்களையும் வைத்து படங்களைத் தயாரித்து வருகிறது.

ரஜினி, அஜித், சூர்யா, தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய தமிழின் முன்னணி கதாநாயகர்களையும் வைத்து படம் தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ். இந்த படங்களின் படப்பிடிப்புகள் இப்போது நடந்து வருகின்றன. அதனால் எந்தந்த படங்கள் எப்போது ரிலீஸாகும் என குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. அதனால் பொங்கலுக்கு இந்த இரண்டு படங்களில் எதை ரிலீஸ் செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாம்.