செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : ஞாயிறு, 23 ஜனவரி 2022 (13:04 IST)

நீங்க இப்படியே போஸ் கொடுங்க... சேலையில் தேவதை மாதிரி இருக்கும் கேபிரில்லா!

குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமாகி பின்னர் சீரியல்களில் நடிக்க துவங்கி இருப்பவர் கேபிரில்லா. இவர் தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து அப்பா படத்தில் நடித்திருந்தார். 
இதனிடையே நடனத்தில் ஆர்வம் கொண்டிருக்கும் கேபிரில்லா பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார். அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டினர். 

அதன் பிறகு சினிமாவில் அதிக கவனம் செலுத்திய கேபிரில்லாவுக்கு ரெட்டை ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி ட்ரடிஷனல் என மாறி மாறி  புகைப்படங்களை வெளியிட்டு வரும் கேபி தற்போது அழகிய சேலையில் தேவதையாக ரசிகர்களை கவர்ந்திழுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.