மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ படத்தின் முக்கிய அப்டேட்!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 9 ஆம் தேதி தொடங்கியது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. படத்துக்கு பைசன் காளமாடன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக மாரி செல்வராஜோடு கூடட்ணி அமைத்துள்ளார் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா. படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.