செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 5 பிப்ரவரி 2020 (14:12 IST)

Trap city படம் மூலம் ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் ஜிவி பிரகாஷ்.. !

கைபா பிலிம்ஸ், கோ ஸ்டுடியோஸ், மற்றும் நாஸிக் ராவ் மீடியா ஆகிய நிறுவனங்கள்  இணைந்து ஹாலிவுட்டில் தயாரித்துள்ள படம் Trapcity.  பிராண்டன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஜிவி பிரகாஷும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ரிக்கி பர்செல் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு, தயாரிப்பாளர் பேசியதாவது,
 
டெல்.கணேசன் பேசியதாவது,
 
"இந்தப்படம் எடுப்பதற்கான ஐடியா 2019-ல் வந்தது. ஒரு சவுண்ட் ட்ராக்  வேலைக்காகத் தான் ஜிவியைச் சந்தித்தேன்..அப்போது தான் அவரை ஹாலிவுட் அழைத்தேன். இப்படத்தில் சர்ஜனாக ஜிவி நடித்துள்ளார்.
 
படத்தின் ஹீரோ பிராண்டன் ஒரு பெரிய ராப் சிங்கர். அவர் அவரது வறுமை காரணமாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட போலிசாரால் சுடப்படுகிறார். அவருக்கு ட்ரீட்மெண்ட் செய்பவராக ஜீவி வருகிறார். இந்தச் சம்பவம் நடக்கும் போதே பிராண்டன் வெளியிட்ட ஒரு பாடல் பெரிதாக ஹிட் ஆகிறது.  படத்தின் கதை இப்படியாகத் தான் ட்ராவல் ஆகும்
 
படம் புரொடக்சன் முடிந்து விட்டது. தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலை நடந்து கொண்டிருக்கிறது.
 
அங்கு ரிலிஸ் எப்படி?
 
அங்கு முதலில் டிஸ்ட்டிப்யூட்டரிடம் பேசுவோம்..அதன் பிறகு நிறைய மார்க்கெட் இருக்கிறது..
 
"ஜீவியை தேர்ந்தெடுத்த காரணம்?
 
"அவரைச் சந்தித்த போதே அவரிடம் ஒரு திறமை இருப்பதாக தெரிந்தது..அவரின் வொர்க் எனக்குப் பிடிக்கும்..இனி இசைக்காக ஹாலிவுட்ல இருந்து வருவார்கள்.
மேலும் இந்தப் படத்தில் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் நடித்துள்ளனர். நம்ம ஸ்டார்ஸும்  இருக்கிறார்கள்... எத்தனை தியேட்டரில் ரிலீஸ் பண்ணணும் என்று ப்ளான் பண்ணவில்லை..
தமிழை விட ஆங்கிலம் மார்க்கெட் 200% அதிகம். அதனால் ஜிவி இண்டெர்நேஷனல் லெவலில் இனி அறியப்படுவார். ஜிவியை அமெரிக்காவில் உள்ள  லோக்கல் மக்கள் அக்செப்ட் பண்ணிவிட்டார்கள். . படம் அங்கும் இங்கும் ஒரே நேரத்தில் ரிலிஸ் ஆகாது. ஏன் என்றால் அங்கு சென்சார் தனி..இங்கும் சென்சார் தனி. டெவில்ஸ் நைட், கிறிஸ்துமஸ் கூப்பன், ட்ராப் சிட்டி, படங்களின் தயாரிப்பைத்  தொடர்ந்து மேலும் இரண்டு படங்களை டிஸ்டிபூட் பண்ண இருக்கிறேன். தமிழில் இப்பைதைக்கு படம் பண்ணும் ஐடியா இல்லை.
 
யாருமே பண்ணாத விசயங்களைத் தான் நான் செய்யணும் என்று நினைக்கிறேன். இந்த ட்ராப் சிட்டி படம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். முதலில் ஆங்கிலத்தில்  அதன்பின் டப் செய்து தமிழில் வெளியீடும் திட்டமும் இருக்கிறது" என்றார்
 
நடிகர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது,
 
இந்தப்படம் எனக்கு நல்ல செயல் எக்ஸ்பீரியன்ஸ். படத்தின் ஹீரோ பிராண்டன் நல்ல மனிதர். அவரும் ஒரு மியூசிக் லவ்வர். அவரோடு வொர்க் பண்றது நல்லாருந்தது..ஹாலிவுட் மாதிரி இடங்களில் தொடர்ந்து பயணிக்க ஆசை இருக்கிறது. அதற்கான முயற்சிகளும் நடக்கின்றன.
 
தமிழ்படத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
 
அதை கம்பேரே பண்ண முடியாது. எனக்கு ஹாலிவுட் படத்தில் ஒரு நன்மை நடந்தது.   கதையை முன்னமே என்னிடம் கொடுத்து விட்டார்கள். அதனால் படத்தை முழுதுவமாக உள்வாங்க முடிந்தது. மேலும்  படப்பிடிப்பிற்குள் செல்லும் முன்பு  ஒரு பக்கா ரிகல்சர் நடக்கும். அது சூட்டிற்கு போகும்போது கான்பிடன்ட்ஸ் கொடுக்கும். இப்படத்திற்காக இரண்டு பாடல்கள் பாடியுள்ளேன். இது பக்கா மியூசிக்கல் மற்றும் திரில்லர் படம்
 
கான்செர்ட் அமெரிக்காவில் பண்ணுவீங்களா?
 
ஜிவி: 350க்கும் மேல் பாடல்கள் பண்ணி இருக்கிறேன்..அதனால் நிச்சயம் கான்செர்ட் செய்வேன்.
உங்களுடைய அடுத்தடுத்த படங்கள்?
 
வசந்தபாலன் சார் இயக்கிய ஜெயில் முதலில் ரிலீஸாக இருக்கிறது. ஐங்கரன், அடுத்து வரும், அதற்கடுத்து எழில் சார் இயக்கிய ஆயிரம் ஜென்மங்கள்..வரும்.  சூரரைப் போற்று, வாடிவாசல் படங்களுக்கு இசை அமைத்து வருகிறேன்".Trap city படம் மூலம் ஹாலிவுட் சினிமாவில் என்ட்ரி ஆவதை ஒரு நல்ல நகர்வாகப் பார்க்கிறேன்" என்றார்