திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2022 (09:43 IST)

டைரக்டர் சொன்னதைதான் செஞ்சேன்! – மாளவிகாவுக்கு நயன் குடுத்த பதிலடி!

படம் ஒன்றில் நயன்தாரா லிப்ஸ்டிக் போட்டு நடித்திருந்தது குறித்த மாளவிகா மோகனனின் மறைமுக விமர்சனத்திற்கு மறைமுக பதில் அளித்துள்ளார் நயன்தாரா.

இளம் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளியாகவுள்ள படம் ‘கனெக்ட்’. முன்னதாக இவர்கள் இருவர் காம்போவில் வெளியான மாயா படம் ஹிட் என்பதால் இந்த படமும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்திற்கான பேட்டி ஒன்றில் பேசிய நயன்தாரா “ஒரு பேட்டியில் ஒரு நடிகை எனது பெயரை சொல்லாமல் நான் நடித்த காட்சி குறித்து பேசியிருந்தார். ஒரு மருத்துவமனை காட்சியில் நான் லிப்ஸ்டிக் போட்டு தலைமுடி கலையாமல் நடித்திருந்ததாக பேசியிருந்தார். ஒரு ரியலிஸ்டிக் படமாக இருந்தால், அதன் இயக்குனர் கேட்டால் நான் அவ்வாறு நடித்திருப்பேன். குறிப்பிட்ட அந்த படத்தில் இயக்குனர் என்ன சொன்னாரோ அதன்படி நடித்தேன்” என கூறியுள்ளார்.

நயன்தாராவின் படக்காட்சியை விமர்சித்த நடிகை யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் நெட்டிசன்கள் பலர் மாளவிகா மோகனின் நேர்காணலை ஷேர் செய்துள்ளனர். அதில் நயன்தாரா பேரை குறிப்பிடாமல் பேசிய மாளவிகா மோகனன், மருத்துவமனை காட்சியில் லிப்ஸ்டிக் போட்டிருந்ததாக பேசியுள்ளார். இந்த இரு வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Edit By Prasanth.K