தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன? ஜி பி முத்து வெளியிட்ட வீடியோ!

Last Modified வியாழன், 15 அக்டோபர் 2020 (11:43 IST)

டிக்டாக்கில் பிரபலமாக இருந்த ஜி பி முத்து சில நாட்களுக்கு முன் தற்கொலை முயற்சி செய்து மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

டிக்டாக்கில் மிகவும் பிரபலமாக இருந்தவர்களில் ஜி பி முத்துவும் ஒருவர். டிக்டாக் தடை செய்யப்பட்டதற்குப் பிறகு இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் இப்போது குடும்ப சூழல் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இது அவரது பாலோயர்ஸ்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ள அவரை ரசிகர்கள் சென்று சந்தித்து ஆறுதல் சொல்லி வருகின்றனர். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ஏன் தற்கொலை முயற்சி மேற்கொண்டார் என பதிலளித்துள்ளார். அதில் ‘லாக்டவுன் காரணமாக ஏற்பட்ட தொழில் பாதிப்பு மற்றும் தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் இந்த முடிவை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :