1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2022 (09:04 IST)

அஜித்தின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா ஜி பி முத்து… அவரே சொன்ன தகவல்!

அஜித் தற்போது துணிவு படத்தை முடித்துவிட்டு அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

அஜித் நடித்து முடித்துள்ள துணிவு படத்தின் ரிலீஸ் பொங்கல் என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான போஸ்ட் புரொரக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்து அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’ஏகே 62 என்ற திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித்தோடு பிரபல யுட்யூபர் ஜி பி முத்து நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஜி பி முத்து “அஜித் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது. வாய்ப்பு வரும் என நம்புகிறேன்” எனக் கூறியதுதான் இந்த தகவல்கள் பரவுவதற்குக் காரணமாக அமைந்தது.

ஜி பி முத்து டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர். அதன் பின்னர் சில படங்களில் நடித்துள்ள அவர் சமீபத்தில் பிக்பாஸ் இல்லத்துக்கு சென்றதன் மூலம் மேலும் பிரபலம் ஆனார்.