தன் பெயரில் பண மோசடி? சூப்பர் ஸ்டார் சல்மான் கான் எச்சரிக்கை
இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான். இவர். கடந்த 1988 ஆம் ஆண்டு பீவி ஹோ தோ ஐசி என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பின்னர், மைனே பியார் கியார் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
அதன்பின்னர். சாஜன், பீவி நம்பர், ஹம் ஆம்பே ஹே கோன், வாட்டட், காட்பாதர், தபாங்க், டைகர், பஜ்ரங்க் பைஜான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் கிஸி கா பாய் கிஸி கி ஜான் வெளியாகி வெற்றி பெற்றது. சினிமாவின் நடிப்பதுடன், பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
இவர் சல்மான் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், புதிய படம் தொடங்கவுள்ளதாகவும், இதற்கு நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகக் கூறி பலரிடம் மோசடி செய்வது நடைபெற்று வந்துள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த சல்மான் கான், தன் டுவிட்டர் பக்கத்தில், தன் பெயரில் படமெடுப்பதாகக் கூறி, மெசேஜ், இமெயில் அனுப்பி மோசடி நடைபெற்று வருகிறது. இந்த செயலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இதில் யாரும் ஏமாற வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.