திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 11 ஜனவரி 2023 (19:19 IST)

பண மோசடி வழக்கில் கைதான அர்ச்சனாவின் சொத்துகள் முடக்கம்!

archana
அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டிய அர்ச்சனாவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

ஒடிஷா மாநிலத்தில் முதல்வர்  நவீன் பட் நாயக் தலைமையிலான பிஜூ  ஜனதா தள ஆட்சி  நடந்து வருகிறது. 

ஒடிஷா மா நிலம் புவனேஸ்வரி  ஜெக்பந்துசந்த். இவரது மனைவி அர்ச்சனா நாக்(26). இவர் அழகு  நிலைய கலைஞராக வேலை செய்து வந்தார்.

இவர், சினிம தயாரிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரை மோசடி செய்து பணத்தை ஈட்ட நினைத்து, அவர்களுடன் நெருக்கமாக இருப்பதுபோல் வீடியோக்கள் எடுத்து, அதை சம்பந்தப்பட்டவர்களிடம் காட்டி மிரட்டி பணம் வசூலித்து வந்துள்ளார்ர்.

இது வெளியே தெரிந்தால் அவமானம் என்று இவரது வலையில் சிக்கியவர்கள் இவர் மிரட்டும்போது பணம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அர்ச்சனா மீது பலர் புகார் கொடுத்த நிலையில், கடந்த அம்டோபர் 6 ஆம் தேதி அர்ச்சனாவையும், அவது கணவர் ஜெக்பந்துவையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அர்ச்சனாவின் ரூ.54 லட்சம் சொத்துகள் ஏற்கனவே கையகப்படுத்திய நிலையில்,  ரூ.3.64 கோடி மதிப்புள்ள  வீட்டை அமலாகத்துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.