“விஜய்யை ‘அண்ணா’ என்று அழைக்க ஒருமாதிரி இருந்தது” – சுனைனா
‘விஜய்யை ‘அண்ணா’ என்று அழைக்க ஒருமாதிரி இருந்தது’ எனத் தெரிவித்துள்ளார் சுனைனா.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘காளி’. விஜய் ஆண்டனி ஹீரோவாகவும், அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 பேர் ஹீரோயின்களாகவும் நடித்துள்ளனர். வருகிற வெள்ளிக்கிழமை இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.
எனவே, புரமோஷனில் ஈடுபட்டிருக்கும் சுனைனாவிடம், விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. “விஜய்யுடன் ‘தெறி’ படத்தில் நடித்தபோது, அவரை ‘அண்ணா’ என்று அழைக்க ஒருமாதிரியாக இருந்தது. ஆனால், அனுபவத்தை வைத்துப் பார்த்தால், என்னுடைய வாழ்க்கையில் நினைத்துப் பார்க்கக்கூடிய காட்சியாக அது இருக்கும்.
சிறிய காட்சிதான் என்றாலும், அதை இரண்டு நாட்கள் படமாக்கினர். அந்த சமயத்தில் விஜய் மற்றும் அட்லீயிடம் பேசிய விஷயங்களை எப்போதும் மறக்க முடியாது. அந்தக் காட்சியும் நன்றாகவே படத்தில் அமைந்தது. விஜய்யுடன் பணியாற்றியது காலத்துக்கும் நினைத்துப் பார்க்கக்கூடிய ஒரு விஷயம்” எனத் தெரிவித்துள்ளார் சுனைனா.