திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2024 (14:55 IST)

தமிழ் திரையுலகில் முதன்முறையாக 31 கிராஃப்ட்களையும் கற்று 'பேய் கொட்டு' திரைப்படம்!

தமிழ் திரையுலகில் திரைப்படத்தை உருவாக்குவதற்கு 24 கிராஃப்ட்டுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது மரபு. 
 
இதுவரை தமிழ் திரையுலகில் 'அஷ்டவதானி', 'தசாவதானி' போன்ற சாதனையாளர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். முதன்முறையாக திரையுலகின் 24 கிராஃப்ட்டுகளையும் சுயமாக கற்றுக்கொண்டு, 'பேய் கொட்டு' எனும் ஹாரர் திரில்லர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
 
கின்னஸ் சாதனையாளரான லாவண்யா. இதனுடன் சப்டைட்டில்ஸ், சென்ஸார் ஸ்கிரிப்ட், 5.1 மிக்ஸ், சவுண்ட் இன்ஜினியரிங் உள்ளிட்ட துணை பணிகளையும் மேற்கொண்டு இப்படத்தினை உருவாக்கி இருக்கிறார்.
 
அறிமுக இயக்குநர் எஸ். லாவண்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேய் கொட்டு' எனும் திரைப்படத்தில் லாவண்யா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், இலும்பு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
 
எஸ். லாவண்யா- பி. வசந்த் -ஜான் விக்டர் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். லாவண்யா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கம் மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் இவரே மேற்கொண்டிருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஓம் சாய் புரொடக்ஷன்ஸ்  எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லாவண்யா தயாரித்திருக்கிறார். 
 
இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி ஒன்றரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.  இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,''
 
சுயாதீன திரைப்பட படைப்பாளியான நான் திரைத்துறையில் இயங்கும் அனைத்து கிராப்டுகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினேன். இதைத்தொடர்ந்து தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, வசனம், இசை, டப்பிங், எடிட்டிங், சிங்கிங், ஆக்டிங், ஃபைட், டான்ஸ், கேமரா, லிரிக்ஸ், கலர் கிரேடிங், இ எஃப் எக்ஸ், வி எஃப் எக்ஸ், எஸ் எஃப் எக்ஸ், காஸ்டிங், ஆர்ட், மேக்கப், லொகேஷன்... ஆகிய 31 கிராப்ட்டுகளையும் சுயமாக கற்று, 'பேய் கொட்டு' எனும் இந்த ஹாரர் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.  
'பேய் கொட்டு' என்பது தவறுகள் செய்தால் தலையில் கொட்டுவார்கள் அல்லவா... அதே போல் நாம் ஏதேனும் தவறாக நினைத்தால், பேய் நம் தலையில் கொட்டும். இது வித்தியாசமான கதைக்களமாகவும், சுவாரசியமான திரைக்கதையாகவும் உருவாகி இருக்கிறது. '' என்றார்.