1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: திங்கள், 22 ஜூலை 2024 (16:10 IST)

ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படத்தின் முதல் பாடலான 'மக்காமிஷி' வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பு!

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படத்தின் முதல் பாடலான 'மக்காமிஷி', அதன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், எழுதி பாடிய பால் டப்பா மற்றும் நடனம் அமைத்த சாண்டி மாஸ்டர் ஆகியோரால் வெளியிடப்பட்டது. 
 
'மக்காமிஷி' என்றால் என்ன என்று சமூக வலைதளங்களில் சுற்றி வந்த கேள்விக்கு கெத்து, மாஸ், ஸ்டைல் என்று அர்த்தம் வரும் என தெரிவித்து ஹாரிஸ் ஜெயராஜ், பால் டப்பா மற்றும் சாண்டி மாஸ்டர் யூகங்களுக்கு எல்லாம் சில தினங்களுக்கு முன் முற்றுப்புள்ளி வைத்திருந்த நிலையில் இப்பாடல்  வெளியிடப்பட்டது. 
 
வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களின் உற்சாக வரவேற்பை பெற்றுள்ள 'மக்காமிஷி' பாடல் இளைஞர்களால் வைப்  செய்யப்பட்டு வருகிறது. 
 
பல்வேறு சமூக வலைதளங்களில் எக்கச்சக்க பார்வைகள், இதயங்கள் மற்றும் லைக்குகளை அள்ளி வருகிறது. 
 
'மக்காமிஷி' பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை கண்டு மிகுந்த உற்சாகமடைந்துள்ள படக்குழவினர் 'பிரதர்' திரைப்படத்தின் இதர பாடல்களை அடுத்தடுத்து வெளியிட தயாராகி வருகின்றனர்.
 
 'பிரதர்' திரைப்படத்திற்காக ஐந்து பிரமாதமான பாடல்களை ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழுமையான ஆல்பமாக இது இருக்கும் என்று இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். 
 
'பிகில்', 'நட்பே துணை', 'தடம்' உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை விநியோகம் செய்து, 'தாராள பிரபு', 'சாணி காயிதம்', 'மத்தகம்', மற்றும் 'அகிலன்' என தயாரிப்பிலும் முத்திரை பதித்து வரும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள 'பிரதர்' படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.