செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 14 ஜூலை 2020 (23:23 IST)

தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரொனா தொற்றால்  பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பரவிவரும் இந்தத் தொற்றால் இதுவரை ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிகப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இந்த தொற்றைத் தடுக்க அரசு வரும் ஜூலை 31 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,  மக்கள் கொரொனா தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் மக்களின் சேவைக்காக இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரயில் சேவையை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு  வலியுறுத்தியதாக தெற்கு ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, கோவை  - மயிலாடுதுறை, திருச்சி - செங்கல்பட்டு, மதுரை -  விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில்  கோவை - காட்பாடி, செங்கல்பட்டு - திருச்சி, அரக்கோணம் - கோவை, ஆகிய பகுதிகளுக்கு  இயக்கப்பட்டிருந்த 7 சிறப்பு ரயில்களும் வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக  தெற்கு ரயில்வே  தற்போது அறிவித்துள்ளது.