ஃபர்ஹானா இஸ்லாமியர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்… தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு நம்பிக்கை
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே டிரைவர் ஜமுனா உள்பட ஒருசில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம் ஒன்றின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஃபர்ஹானா என்று டைட்டில் வைககப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இந்த படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக கண்டனங்கள் எழுந்தன. ஆனால் அதை மறுத்துள்ள தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு “இந்த படம் இஸ்லாமியர்கள் பயப்படும் படியாக இல்லாமல், கொண்டாடும் விதமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.