1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 3 மே 2023 (15:39 IST)

அஜித் மாதிரி கோட் சூட்டில் கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன  திரைப்படம் டிரைவர் ஜமுனா.

இதையடுத்து அவர் நடிப்பில்  பர்ஹானா உள்ளிட்ட சில படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் தன்னால் இப்போது அதிக கதைகளைக் கேட்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் கோட் சூட் அணிந்து அவர் இப்போது வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.