ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 5 மே 2023 (07:56 IST)

மீண்டும் ஒரு குறட்டை பிரச்சனை படம்… ஜி வி பிரகாஷின் டியர் பட போஸ்டர்!

ஜி வி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் டியர் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. மற்ற குணச்சித்திர வேடங்களில் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செத்தும் ஆயிரம் பொன்' எனும் திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் போஸ்டரின் மூலம் குறட்டை சம்மந்தப்பட்ட பிரச்சனையைப் பற்றிய படம் என தெரிய வருகிறது. ஏற்கனவே இதே கதைக்களத்தோடு மணிகண்டன் நடிப்பில் ‘குட்நைட்’ என்ற படம் மே 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.