1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 8 ஜூன் 2024 (15:11 IST)

காஞ்சனா 4 ல் இந்த நடிகைதான் வேண்டும்… அடம் பிடிக்கும் ரசிகர்கள்!

தனது திரை பயணத்தை துவங்கி டான்ஸ் மாஸ்டராக, நடிகராக,  சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் விசித்திரமான பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார். அப்படங்களில் ஒன்று தான் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மாபெரும் வெற்றி பெற்ற “முனி”. இப்படத்தை தொடர்ந்து  இரண்டாம் பாகம் “காஞ்சனா” என்ற பெயரிலும்  பிறகு “காஞ்சனா-2 “ என வெளியான அனைத்து பாகங்களிலும்  லாரன்ஸ்  வெறித்தனமாக நடித்து உள்ளார்.

இதையடுத்து அவர் காஞ்சனா 4 படத்தை பிரம்மாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் சில ஆண்டுகளாக இந்த படம் தொடங்கப்படாமல் கிடப்பில் கிடந்தது. இந்நிலையில் செப்டம்பரில் அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வழக்கமாக லாரன்ஸின் படங்களில் பேய் காமெடியைப் போலவே, கதாநாயகிகளின் கிளாமரும் பெரிய அளவில் பேசப்படும். இந்நிலையில் இப்போது அவர் காஞ்சனா 4 எடுத்தால் அதில் கண்டிப்பாக மிருனாள் தாக்கூரைதான் நடிக்க வைக்க வேண்டும் ரசிகர்கள் மீம் உருவாக்கி கோரிக்கை வைத்து வருகின்றனர். சமீபகாலமாக மிருனாள் தாக்கூர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால்  இளைஞர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.