இப்ப போய் அமலாபால் இப்படி செய்யலாமா? கடுப்பில் ரசிகர்கள்

VM| Last Updated: ஞாயிறு, 23 டிசம்பர் 2018 (13:12 IST)
நடிகை அமலா பால் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 
 
இவர் கடைசியாக நடித்த ராட்சசன் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் உடன் ஜோடியாக நடித்திருந்தார். அவரது இரண்டாவதாக அமலாபால் திருமணம் செய்ய உள்ளதாக சிலர் கிளப்பி விட்டனர். இதனால் மிகவும் நொந்து போய் விட்டார் அமலாபால். 
 
ராட்சசன் வெற்றியைத் தொடர்ந்து அவரிடம் கதை சொல்ல இயக்குனர்கள் வரிசையில் நிற்கிறார்கள். ஆனால் நடிகை அமலாபால் தனது சமூக வலைதளங்களில் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 
 
கடைசியாக அவர் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு பெரிய நடிகைக்கு இது அழகல்ல என்று கண்டித்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :