1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (17:07 IST)

மாறன் நெகட்டிவ் விமர்சனம்.. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாறன் திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’மாறன் மார்ச் 11 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸானது. வெளியானது முதல் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. படத்தில் ஒரு அம்சம் கூட ரசிக்கும்படி இல்லை என ரசிகர்கள் வெறுத்துப் பேசி வருகின்றனர். இந்நிலையில் மோசமான விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றும் விதமாக இயக்குனர் கார்த்திக் நரேன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஸ்டேட்டஸ் ஒன்று சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அதில் ‘ரைட்டு… உண்மையை அப்புறம் சொல்றேன்’ என பூடகமாக தெரிவித்திருக்கிறார்.

எப்படியோ படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றுவிட்ட நிலையில் படக்குழுவினரை விட படத்தை வெளியிட்ட டிஸ்னி ஓடிடியைதான் ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஏனென்றால் சமீபத்தில் டிஸ்னியில் ரிலீஸான அனபெல் சேதுபதி, அன்பறிவு உள்ளிட்ட எந்த படமும் ரசிகர்களைக் கவரவில்லை. இதனால் வரிசையாக மோசமான படங்களை ரிலிஸ் செய்வதாக அந்த ஓடிடி தளத்தை குறிவைத்து ட்ரோல் மீம்ஸ்கள் பறக்க ஆரம்பித்துள்ளன.