புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 12 மார்ச் 2022 (16:44 IST)

ஓ இதனாலதான் மாறன் படத்துல இருந்து விலகுனதா அறிவிச்சாரா விவேக்…. செம்ம எஸ்கேப்!

மாறன் படத்தின் திரைகக்தைக் குழுவில் ஒருவராக இணைந்திருந்த பாடலாசிரியர் விவேக் திடீரென நான் படத்தில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்திருந்தார்.

 
தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’மாறன் நேற்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. வெளியானது முதல் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. படத்தில் ஒரு அம்சம் கூட ரசிக்கும்படி இல்லை என ரசிகர்கள் வெறுத்துப் பேசி வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் திரைக்கதைக் குழுவில் பணியாற்றி இருந்த பாடலாசிரியர் விவேக் பகிர்ந்திருந்த டிவீட் இப்போது கவனத்தைப் பெற்றுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் விவேக் ’தனுஷ் நடித்த ’மாறன்’  திரைப்படத்திலிருந்து நான் ஆரம்பத்திலேயே விலகிவிட்டேன் என்றும் எனவே எனக்கு வாழ்த்துக்கள் வேண்டாம்’ என்றும் கூறியிருந்தார். படம் மிக மோசமாக இருப்பதை அறிந்துதான் முன்பாகவே விவேக் படம் வெளியானதும் தன்னையும் சேர்த்து ட்ரோல் செய்வார்கள் என்பதால் முன்பாகவே பொறுப்புத்துறப்பு கொடுத்து எஸ்கேப் ஆகிவிட்டார் என்று ரசிகர்கள் இப்போது கருத்து சொல்ல ஆரம்பித்து வருகின்றனர்.