பீஸ்ட் டிக்கெட் வேண்டுமா…. முன்பதிவு செய்ததை திரும்ப விற்கும் ரசிகர்கள்?
பீஸ்ட் படத்தின் மோசமான விமர்சனங்களை அடுத்து அந்த படத்துக்கு செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பீஸ்ட் திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. படத்தின் மோசமான திரைக்கதை காரணமாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். நேற்றே சமூகவலைதளங்களில் மீம்களும் ட்ரோல்களும் உருவாகி பரவின. இந்நிலையில் இன்று கேஜிஎப் 2 ரிலீஸாகி மிகப்பெரிய பாராட்டுகளை ரசிகர்களிடம் பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று பீஸ்ட் இரண்டாம் நாளில் நகர்ப்புற பகுதிகளை தவிர மற்ற புறநகர் பகுதிகளில் பெரிய வரவேற்பு இல்லை என சொல்லப்படுகிறது. இரண்டாம் நாளே திரையரங்குகள் காலியாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பலரும் தாங்கள் முன்பதிவு செய்து வைத்திருந்த பீஸ்ட் பட டிக்கெட்களை “யாருக்காவது வேண்டுமா “ எனக் கேட்டு விற்க ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கே ஜி எப் 2 படம் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று வருவதால் பீஸ்ட் படத்தின் வசூலில் மிகப்பெரிய அடி விழும் என சொல்லப்படுகிறது.