புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 25 டிசம்பர் 2018 (13:29 IST)

பிக்பாஸ் ஐஸ்வர்யா செய்த வேலை: நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?

நடிகர் ஆரி மற்றும் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா ஆகியோர் ஜோடியாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்து  வருகிறது.

படப்பிடிப்பின் இடைவேளையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினர்.  கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளை தங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு அவர்கள் அழைத்து வந்தனர்.  மதிய உணவு மற்றும் பரிசுப் பொருட்களை குழந்தைகளுக்கு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினர். இதனால் குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்வில் நடிகர் ஆரி நடிகை ஐஸ்வர்யா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்
எதிர்பாராத இந்த பரிசு மற்றும் நட்சத்திரங்கள் சந்திப்பால் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தனர். இவர்களின் இந்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.