ரஜினியின் பட கட் அவுட்டுக்கு ’மலர் தூவ ’அனுமதி மறுப்பு !
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள தர்பார் படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. ரஜினி படம் வெளிவரும் நாளன்று ரசிகர்கள் பிரமாண்டமாக கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்வது வழக்கம்.
ஆனால் இம்முறை ரஜினி ரசிகர்கள், சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ் திரையரங்கில் காட்சி தொடங்கும்போது படத்தை வரவேற்கும் விதமாக ஹெலிகாப்டர் மூலம் கட் அவுட் மீது மலர் தூவ மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இந்த மனு வருவாய் கோட்டாச்சியர் பார்வைக்கு அனுப்பப்பட்டு, வட்டாட்சியருக்குய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் தர்பார் பட கட் அவுட்டுக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர்தூவ போலிஸார் அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.