1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 ஜூன் 2021 (12:39 IST)

அப்டேட் வராமலே சாதித்த வலிமை – புக் மை ஷோவில் 1 லட்சம் பேர் ஆர்வம்!

அஜித் நடித்து வரும் வலிமை படம் வெளியாகாத நிலையிலும் புக் மை ஷோ செயலியில் ஒரு லட்சம் லைக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளது.

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் வலிமை படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை ஒரு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கூட வெளி வராததால் அஜித் ரசிகர்கள் அரசியல் தலைவர்கள் முதல் விளையாட்டு மைதானங்கள் வரை அப்டேட் கேட்டு போர்டு பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் திரைப்படங்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யும் செயலியான புக் மை ஷோவில் விரைவில் வெளியாக உள்ள படங்கள் வரிசையில் வலிமை இடம்பெற்றுள்ளது. ஒரு படத்தை பார்க்க ஆர்வமுடன் இருப்பதாக தெரிவிக்க அதில் இண்ட்ரெஸ்ட் என்ற ஆப்ஷனும் உள்ளது. இந்நிலையில் புக் மை ஷோவில் அஜித் ரசிகர்கள் பலரும் வலிமை படத்தை பார்க்க ஆர்வமுடன் இருப்பதாக இண்ட்ரெஸ்ட் ஆப்ஷனை தேர்வு செய்துள்ளனர்.

இதுவரை ஒரு லட்சம் இன்ஸ்ட்ரெஸ்ட் ரெக்வெஸ்ட் பெறப்பட்டுள்ள நிலையில் எந்த வித அறிவிப்பும் வெளியாகாத படத்திற்கு இவ்வளவு இண்ட்ரெஸ்ட் வந்துள்ளது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.