"என் வாழ்வில் வந்த வானவில் நீயடி"... மனைவியை கவிதையால் வாழ்த்திய சாண்டி!

Papiksha Joseph| Last Updated: வெள்ளி, 25 ஜூன் 2021 (12:07 IST)

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுக்கு நடனம் கற்றுத்தரும் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் சொந்தமாக நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பெற்றார்.
சாண்டி நடிகை காஜல் பசுபதி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையேயும் நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாக முறையாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

அதையடுத்து சாண்டி சில்வியா என்ற பெண்ணை மீண்டும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு லாலா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறார். தற்போது சாண்டி மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். அண்மையில் தான் மனைவிக்கு வளைகாப்பு நடத்தி சாண்டி அழகு பார்த்தார்.

இந்நிலையில் தாரத்தி சில்வியா பிறந்தநாளுக்கு சாண்டி கேக் வெட்டி அவரை கட்டியணைத்து அன்பு மழை பொழிந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, "எனக்காகவே வாழும் ஒரு உயிர், என்னோட வெற்றிக்காகவே உழைக்கும் ஒரு உயிர், உன்னாலே நான் உனக்காகவே நான், அன்பு அறியாத என் வாழ்வில் வந்த வானவில் நீயடி. ஐ லவ் யு ஆல்வேஸ் கண்ணம்மா"என்று உருக்கமாக பாசத்துடன் கவிதையை கேப்ஷனாக கொடுத்து அந்த ஃபோட்டோவை ஷேர் செய்துள்ளார் சாண்டி. இந்த ஃபோட்டோ மற்றும் கவிதையை பார்த்த சாண்டி ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கமெண்ட்ஸாக பதிவிட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :