1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (10:52 IST)

அச்சு அசல் வெற்றிமாறன் போலவே இருக்கும் நபர் - பார்த்ததும் பரவசமான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் எடுத்தாலும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் படமாகவும் விருதுகளை குவிக்கும் படமாகவும் உருவாக்குபவர் வெற்றிமாறன்.
 
தனுஷை வைத்து பொல்லாதவன் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகம் ஆன இவர் ஆடுகளம், விசாரணை வட சென்னை, அசுரன், பாவக்கதைகள், விடுதலை பாகம் 1,2 உள்ளிட்ட முத்தான சில படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராக முத்திரை குத்தப்பட்டிருக்கிறார். 
அச்சு அசல் இயக்குனர் வெற்றிமாறன் போலவே இருக்கும் நபர்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் | Fan Look Alike Director Vetrimaaran
 
இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் போலவே மேக்கப் போட்டுக்கொண்டு ரசிகர் ஒருவர் போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக நெட்டிசன்ஸ் அட நம்ம வெற்றிமாறன் போலவே இருக்கங்களேப்பா என கூறி லைக்ஸ் குவித்துள்ளனர்.