1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (08:40 IST)

பிக்பாஸ் ஆரவ் தந்தை மறைவு: அதிர்ச்சியில் சக போட்டியாளர்கள்

பிக்பாஸ் ஆரவ் தந்தை மறைவு: அதிர்ச்சியில் சக போட்டியாளர்கள்
கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசன் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பிக்பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ்வின் தந்தை காலமானதாக சற்று முன்னர் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
திருச்சியை சேர்ந்த பிக்பாஸ் ஆரவ் வின்னரின் தந்தை சென்னையில் பணிபுரிந்ததை அடுத்து அவர்களது குடும்பம் சென்னைக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே ஷிப்ட் ஆனது. இந்த நிலையில் ஆரவ்வின் தந்தை இன்று அதிகாலை 01.30 மணிக்கு உடல்நலக் கோளாறு காரணமாக காலமானதாக தெரிகிறது. இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர் 
 
ஆரவ் தந்தையின் இறுதிச் சடங்கு இன்று மாலை அவரது சொந்த ஊரான நாகர்கோவிலில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரவ் தந்தையின் மரணத்திற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது