1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : புதன், 14 ஜூன் 2023 (17:25 IST)

பிரபல தொகுப்பாளினி மர்ம நபரால் கடத்தல் - வலைவீசி தேடும் விஜய் டிவி!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெரும் பிரபலமடைந்தவர் விஜே பிரியங்கா. 
 
நகைச்சுவையாக பேசுவது மட்டுமின்றி பாடல் பாடுவது , நடனமாடுவது உள்ளிட்ட பல கலைகளில் திறமை வாய்ந்தவர். 
 
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்துக்கொண்டு படு பேமஸ் ஆகினார். எப்போதும் சிரித்த முகத்துடன் கலகலனன்னு பேசி எல்லோரையும் மகிழ்விக்கும் சிறந்த குணம் கொண்டவர் பிரியங்கா. 
 
இந்நிலையில்  தற்போது ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கி வருகிறார்.. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்றில் பிரியங்கா மர்ம நபரால் கடத்தப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.