1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (20:10 IST)

ரஜினி குறித்த விமர்சனத்திற்கு பதில் அளித்த பிரபல இயக்குநர்

தமிழ் சினிமாவில் உயிரே திரைப்படத் தயாரிப்பாளர் ராம்கோபால் வர்மா ரஜினி குறித்து விமர்சித்ததற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் ஹிந்தி சினிமா இயக்கு நரும் தயாரிப்பாளருமான ராம்கோபால் வர்மா, தனது டுவிட்டர் பக்கத்தில் அல்லு அர்ஜூன்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்றும் மற்ற நடிகர்கள் சூப்பர் ஸ்டாரல்ல எனவும் கூறி ரஜினியை விமர்சித்திருந்தார். இது ரஜினி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


ஒரு செய்தியாளர் ராம்கோபால் வர்மாவிடம், ரஜினி மீது மோதல் போக்கை ஏன் கடைபிடிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அதில் உண்மையில்லை. அவர் பெரிய சூப்பர் ஸ்டார். அவர் பெரிய நடிகர் அவர்  நடந்து வருவதை மட்டும் 2 மணி   நேரம் ரசித்துப் பார்ப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சசிகலா என்ற படத்தை கைவிட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.