1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 26 மார்ச் 2022 (17:53 IST)

’தலைவர் 169’ படத்தின் டைட்டில் இதுதான்: நெல்சன் முடிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்திற்கு ஒரே ஒரு ஆங்கில வார்த்தையில் தான் டைட்டில் வைக்க நெல்சன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
ஏற்கனவே அவரது முந்தைய படங்களான பீஸ்ட் மற்றும் டாக்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே ஒரு ஆங்கில வார்த்தையில் தான் டைட்டில்களாக அமைந்ததை அடுத்து தலைவர் 169 படத்திலும் அதே போன்ற டைட்டில் வைக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது