புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 11 அக்டோபர் 2018 (15:09 IST)

சின்மயி லிஸ்டில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்

சின்மயி தற்பொழுது இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
 
சின்மயி கடந்த சில தினங்களாக பிரபலங்கள் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்களைக் கொடுத்து வருகிறார். இதில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குனர் கல்யாண், பாடகர் கார்த்திக் என லிஸ்டுகளை அடுக்கிக்கொண்டே போகிறார்.
 
அந்த வரிசையில் பெண் ஒருவர் இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்காவால் சந்தித்த பாலியல் அவலங்களைப் பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பெண்ணின் பெயரை குறிப்பிடாமல் சின்மயி அதனை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.