வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 5 டிசம்பர் 2020 (21:13 IST)

திருவண்ணாமலை ஜோதியை தரிசித்த பிரபல நடிகை !! வைரலாகும் போட்டோ

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலின் தீபத்தை பிரபல நடிகை சஞ்சிதா தரிசித்தார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவி கார்த்திகை மாதம் காத்திரிகை நட்சத்திரமும் பௌர்ணமியும் இணைந்துவரக் கூடிய நாளில் திருகார்த்திகை ஜோதி ஏற்றப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 20 ஆம தேதி காத்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

 இந்த வருடம் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் கருவறை முன்பும் மகா தீபம் மலை 6 மணிக்கு 2668 அடி உயரத்தில் உள்ள மலையில் மீது பெரிய கொப்பறையில் ஏற்றப்பட்டது.

இப்போது கொரோனா தொற்றுக்காலம் என்பதால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரபல நடிகை சஞ்சிதா திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசனம் செய்ததைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது வைரலாகி வருகிறது.