திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 16 ஜூன் 2020 (13:37 IST)

கண்ணை கட்டி கணவனை கடத்தி சென்று சர்ப்ரைஸ் கொடுத்த மைனா நந்தினி - வீடியோ

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் குடும்ப பாங்கான கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக வலம் வர தொடங்கினார்.

இதனால் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அடிதடுத்து கிடைத்தது. அந்தவகையில் இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். இதையடுத்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய தொடர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி ஆகிய படங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

இவரது முதல் திருமணத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து கணவனை இழந்த மைனா பின்னர் சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து மறுமணம் செய்துகொணடர். அழகான மறுவாழ்வை தனது கணவருடன் துவங்கியிருக்கும் மைனா நந்தினி தற்போது தான் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில், அண்மையில் கணவர் யோகேஷின்  பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுக்க அவரை கண்ணை கட்டி காரில் அழைத்து சென்று சிறுவர்கள் இல்லத்தில் வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். இதோ அந்த வீடியோ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Birthday special for my pappa @yogeshwaram_official thanks to @surpriseplanners_official

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on