வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 23 டிசம்பர் 2022 (15:03 IST)

பிரபல நடிகர் சத்யநாராயணா காலமானார்- சினிமாத்துறையினர் இரங்கல்!

sathya narayana
பிரபல தெலுங்கு நடிகர் சத்ய  நாராயணா இன்று உடல் நலக் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்த பிரபல நடிகர் கைகலா சத்திய நாராயணா(87).

இவர், சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று பிலிம் நகரில் அவர் காலமானார்.

கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கவுதாவரத்தில் பிறந்து வளர்ந்த சத்திய நாராயணா , இதுவரை 777 படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார்.

நடிகர் கமலின் பஞ்சதந்திரம், சத்தியராஜின் பெரியார் உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.